பாடல் #972

பாடல் #972: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

இயைந்தனள் ஏந்திழை என்னுள மேவி
நயந்தன ளங்கே நமசிவ என்னும்
பயந்தனை யோரும் பதமது பற்றும்
பெயர்ந்தனன் மற்றும் பிதற்றறுத் தேனே.

விளக்கம்:

பாடல் – 971 ல் உள்ளபடி ‘வ’ எழுத்தை ஓதிய எம்முள்ளே சிவசக்தி அடியேனின் உள்ளத்தோடு சேர்ந்து இருந்து எமது பக்குவம் அறிந்து அதன்படி வழிகாட்டினாள். அதன்படி ‘நமசிவ’ எனும் மந்திரத்தை எப்போதும் தியானித்துக் கொண்டே இருந்து சிந்தனை மாறுபடாமல் சிவசக்தியின் திருவடியை பற்றிக் கொண்டு திருவடியைத் தவிர்த்த மற்ற அனைத்தையும் எம்மிடமிருந்து அறுத்து விட்டேன்.

குறிப்பு: ‘நமசிவ’ எனும் மந்திரத்தை முறைப்படி குருவின் மூலம் கற்றுக் கொண்டு அதை தியானம் செய்பவர்களுக்கு இறைவனைத் தவிர மற்ற பற்றுக்கள் அனைத்தும் விலகிவிடும்.

2 thoughts on “பாடல் #972

  1. MURALI Reply

    THIRUCHIRAMBALAM!
    SILLA IDANGALIL SHIVAYA NAMA (VA-KURIL)
    SILLA IDANGALIL SHIVAAYA NAMA (VAA-NEDIL)
    KARANAM UNDO. ATHAN VILAKKAMM ARIYA AVAL. KELVI SARIYANAL THELIVU PADUTHUNGAL NANDIR. THIRUCHITRAM BALAM!!

    • Saravanan Thirumoolar Post authorReply

      சக்கரங்களில் மந்திரங்களை வரிவடிவமாக எழுதும் போது குறிலாகவும் (சிவயநம) மந்திரங்களை பீஜங்களாக செபிக்கும் போது பாடலில் உள்ளபடி அல்லது குருநாதர் உபதேசித்தபடி குறிலாகவோ அல்லது நெடிலாகவோ (சிவாயநம) உச்சரிக்கலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.