பாடல் #208: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்துஅவர் போகின்ற வாறே.
விளக்கம்:
மன உறுதி இல்லாதவன் வைத்திருக்கும் ஒழுக்கமானது குளத்தை முடியிருக்குத் பாசி போன்றது. ஆசை ஒன்று வந்தவுடன் குளத்திற்குள் இருக்கும் பாசிக்கு நடுவே ஒர் கல்லை போட்டதும் அது உடனே உள்ளே சென்று விடும். அது போல் மன உறுதி இல்லாதவனிடம் வரும் ஆசையானது தவறான ஆசையாக இருந்தாலும் உடனடியாக செய்து விடுவான். ஆசையில் மனம் ஆழ்ந்து இருக்கும் எல்லை வரை சென்று இன்பத்தை அனுபவிப்பவர்கள். மனதின் அடியாழம் வரை சென்று சுத்தமாக ஆசையை தடுக்கவில்லை என்றால் பிறவிப் சுழற்சியில் சிக்கி பிறந்து கிடக்கும் வழி இதுவாகவே இருக்கும்.




