பாடல் #0

பாடல் : திருமந்திர விநாயகர் வணக்கம்

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

விளக்கம்:

ஐந்து கரங்களைக் கொண்டவனும், யானையை முகமாகக் கொண்டவனும், இளம் பிறை நிலா போன்ற வளைந்த கொம்பைக் கொண்டவனும், குருவாக இருக்கும் இறைவனின் மகனாக இருப்பவனும், அறிவின் முழுஉருவாகவும் இருப்பவனை, எனது தலைமேல் வைத்து, அவனது திருவடியை போற்றி வழிபடுகிறேன்.