பாடல் #922: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
நாடும் பிரணவ நடுவிரு பக்கம்
ஆடு மவர்வாய் அமர்ந்தங்கு நின்றது
நாடு நடுவுண் முகநம சிவாய
வாடுஞ் சிவாயநம புறத் தாயதே.
விளக்கம்:
பாடல் #921 இல் உள்ளபடி எழுதி அமைத்த உருவத்தின் நடுவில் இருக்கும் ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு மேலே இருக்கும் ய எழுத்துக்கு இரண்டு பக்கமும் இருக்கும் சி எழுத்துக்கள் திருவம்பலத்தில் ஆடுகின்ற நடராஜரின் திருவாயாகவும் அதற்கு நடுவில் நிற்கின்ற நமசிவாய மந்திரம் நடராஜரின் திருமுகமாகவும் அதற்கு கீழே இருக்கின்ற சிவாயநம மந்திரம் நடராஜரைச் சுற்றியுள்ள நெருப்பு வட்டமாகவும் இருக்கின்றது.

Where is yantra for this?
இப்பாடலிலேயே ஆரம்பத்தில் பாடல் 921 இல் உள்ளபடி என்று குறிப்பு கொடுத்திருக்கிறோம். இப்பாடலின் முன்உள்ள பாடலை பார்க்கவும்