பாடல் #1240: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.
விளக்கம்:
பாடல் #1239 இல் உள்ளபடி சாதகர்கள் செல்கின்ற மேன்மையான வழியாகவே ஆகி அவரது வழிகளுக்குத் தகுதியான அணிகலன்களை அணிந்து கொண்டு நிற்கின்ற இறைவியை எப்போதும் இறைவனை விட்டுத் தனியாக பிரித்து வைத்து நினைக்காமல் பிண்ணிய சடை முடியில் கங்கையையும் பிறை நிலாவையும் சூடியிருக்கும் இறைவனுடனே இறைவியை ஒன்றாக சேர்த்து வைத்து எப்போது அதை நினைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தமது எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்களின் மேல் வைத்து தியானிக்கும் சாதகர்கள் அம்மை அப்பராகிய அவர்கள் இருவரோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருப்பார்கள்.
pls leave ur hand phone number here
எமது தொலைபேசி எண் 9677074974. இந்த வலைதளத்தின் தொடர்பு பக்கத்தில் எமது தொலைபேசி எண் மற்றும் மெயில் ஐடி உள்ளது.