பாடல் #1228

பாடல் #1228: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நுண்ணறி வாகும் நுழைபுலன் மாந்தர்க்குப்
பின்னறி வாகும் பிரானறி வாற்றடஞ்
செந்நெறி யாகும் சிவகதி சேர்வார்க்குத்
தன்னெறி யாவது சன்மார்க்க மாமே.

விளக்கம்:

பாடல் #1227 இல் உள்ளபடி பேரறிவை நோக்கி செல்லுகின்ற சாதகர்களுக்கு பேரறிவின் நுண்ணியமான அறிவாக இருக்கின்ற இறைவியே அவர்களுக்கு புத்தி நுட்பமான அறிவைக் கொடுக்கின்றாள். அவர்களுக்குப் பின்னால் இருந்து ஆட்டுவிக்கின்ற அறிவாக இருப்பது இறைவனுடைய பேரறிவாகும். சிவத்தோடு ஒன்றாக கலக்க வேண்டும் என்று இறைவனது பேரறிவை அறிந்து கொண்டு அதன் வழியே செல்லுகின்ற சாதகர்களுக்கு அவர்கள் செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருப்பதுவே சன்மார்க்கம் என்று அழைக்கப் படுகின்றது.

4 thoughts on “பாடல் #1228

  1. Pramilasenthilkumer Reply

    அற்புதம் பயிற்சி பெற விரும்புகிறேன் எவ்வாறு தொடர்பு கொள்வது அலைபேசி எண்

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் இலவச வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இணைந்து கொள்ளுங்கள்.

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் இலவச வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இணைந்து கொள்ளுங்கள்.

Leave a Reply to PramilasenthilkumerCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.