பாடல் #1167: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
கண்டெண் திசையுங் கலந்து வருங்கன்னி
பண்டெண் திசையும் பராசக்தி யாய்நிற்கும்
விண்டெண் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டெண் திசையுந் தொழநின்ற கன்னியே.
விளக்கம்:
பாடல் #1166 இல் உள்ளபடி ஞானத்தால் தரிசனம் செய்து கொண்டே இருக்கின்ற சாதர்களோடு எட்டு திசைகளிலும் கூடவே சேர்ந்து வருகின்ற என்றும் இளமையான இறைவியானவள் ஆதியிலிருந்தே எட்டு திசைகளிலும் இருக்கின்ற அனைத்து உலகங்களையும் இயக்கிக் கொண்டு வீற்றிருக்கின்றாள். இதை செய்து கொண்டு விண்ணகத்தில் இருக்கும் இறைவியின் நிலையை அடைந்த சாதகர்களை எட்டு திசையிலும் இருக்கின்ற உயிர்கள் நறுமணம் வீசும் மலர்கள் தூவி அர்ச்சித்து தொண்டு செய்து எட்டுத் திசையெங்கும் அவர்களை வணங்கி நிற்கும்படி அருளுகின்றாள் என்றும் இளமையான இறைவி.
அற்புதமாக உள்ளது
அத்தனையும்download செய்து வைத்திருக்கிறேன்
ஒரு முறைக்கு இரண்டு முறை படிக்கும் போது தெளிவாக புரிகிறது
தங்களது இந்த சேவைக்கு திருமூலர் மஹான் ஆசிர்வாதம் தங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்
நன்றி