பாடல் #935

பாடல் #935: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

கூத்தனைக் காணும் குறிபல பேசிடிற்
கூத்த னெழுத்தின் முதலெழுத் தோதினார்
கூத்தனொ டொன்றிய கொள்கைய ராய்நிற்பர்
கூத்தனைக் காணும் குறியுமது வாமே.

விளக்கம்:

திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடைய வழிகள் பல இருக்கிறது என்று பேசினாலும் இறைவனின் வடிவமாக இருக்கும் நமசிவாய மந்திரத்தின் முதலெழுத்தான ‘ந’ அல்லது அதன் அட்சரமான ‘அ’ என்ற எழுத்தை செபித்தால் இறைவனாகிய அந்த எழுத்தோடு ஒன்றாக சேர்ந்து நிற்பார்கள். இதுவே திருவம்பலச் சக்கரத்தில் திருநடனமாடும் இறைவனைக் கண்டு அடையும் வழியாகும்.

குறிப்பு: ‘ந’ அல்லது ‘அ’ என்ற முதலெழுத்தை ஒலியலை சிறிதும் மாறாமல் தொடர்ந்து உச்சரித்து செபிக்க வேண்டும்.

2 thoughts on “பாடல் #935

  1. முருகானந்தன் Reply

    ஐயா. வணக்கம். ஒரு ஐயம்.

    “கூத்தனெழுத்தின் முதலெழுத்தோதினார்” என்றல்லவா வருகிறது. கூத்தன் என்றால் சிவன். இச்சொல்லின் முதலெழுத்து சி.

    நீங்கள் ந என்று எப்படி உறுதி செய்கிறீர்கள்..

    • Saravanan Thirumoolar Post authorReply

      இரண்டு வகைகளில் நாம் உறுதி படுத்திக் கொள்ளலாம். 1. கூத்தன் என்று கூறிப்பிடப்படுபவர் நடராஜர். ஐந்து தொழில்களையும் ஒன்றாக சேர்த்து செய்யும் இறைவனை நடராஜர் தத்துவத்தில் பார்க்கலாம். அவருடைய முதலெழுத்து ந. 2 ஆவது இறைவன் ஓங்கார தத்துவமாக இருக்கிறார். ஓம் எழுத்தை அ காரம் உ காரம் ம காரம் ஆக பிரிக்கலாம். இதில் முதலில் வருவது அ என்கின்ற அட்சரம். இந்த அ என்ற அட்சரத்தின் எழுத்து ந ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.