பாடல் #668: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
அணுமாதி சித்திக ளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையில் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே.
விளக்கம்:
பாடல் #667 ல் உள்ளபடி உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் அவ்வுயிருக்குக் கிடைக்கக் கூடிய எட்டுவித சித்திகளான, 1. அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல். 2. மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல். 3. கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல். 4. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல். 5. பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல். 6. பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல். 7. ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல். 8. வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல் ஆகியவனவாகும்.
கருத்து: உயிருக்குள் இறைவன் ஜோதியாய் விளங்கினால் எட்டுவித சித்திகளும் கிடைக்கும்.
668வது பாடல் பொழிப்புரை வேண்டும். அதாவது அருஞ்சொற் பதம் வேண்டும். Word by word meaning is required.
பதிவிடுவோம்
Word by word meaning of verse 668 is needed please.