25-3-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
பல மகான்களின் அருள் கிடைத்தும் ஏன் கடினங்கள் பல வருகின்றன?
துக்கங்கள் துயரங்கள் என தனியாக எடுத்துக் கொண்டால் கொண்டால் இது கர்ம விதிகளாகும் இதனை தீர்த்தல் வேண்டும். மகான் என்கின்ற போதிலும் அவரின் கர்மங்களை அவர் தீர்த்தாக வேண்டும் என்பது விதி. இது மட்டுமல்லாமல் நாட்டின் கர்மங்கள் என்று ஒன்றும் உண்டு இதன் விளைவாக நாட்டில் சேதங்கள், துக்கங்கள், துயரங்கள், இயற்கையின் சீற்றங்கள், மனிதர்களின் கொடுமைகள் என்பதெல்லாம் காணக்கூடும். இதுவே இக்காலத்தில் நடைபெறுகின்றது. இந்நாட்டின் குறிப்பினை கண்டு கொண்டால் இந்நாடு தன் கர்மநிலைகளை தீர்த்துக் கொள்கின்றது. இத்தகைய நிலையில் அங்காங்கு வருங்காலங்களில் நாடுகள் சீர்கெட்டு மறைந்து விடும் என்கின்ற நிலைகளும் உண்டு. இவை அனைத்தும் கர்ம நிலைகளே. இதற்கும் மேலாக யுகத்தின் கர்மம் என்று ஓன்றும் உண்டு. இதுவும் சீராக மீண்டும் சத்திய யுகத்திற்கும் செல்லக்கூடும். இத்தகைய நலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் இயன்றளவு நல்லதே செய்தல் வேண்டும். இயன்றளவு கெடுதல் செய்யாது இருத்தல் வேண்டும். இதுவே நாம் கடைபிடிக்க வேண்டியது.
Like this:
Like Loading...