16-9-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: மனிதனுக்கு விடுதலை கிட்டாமல் தடுப்பது எப்பொருள்?
இதில் பெரும் சிந்தனை தேவையற்றதாகின்றது. ஏனெனில் பெரும் சொத்தானது மனிதனுக்கு தன் உயிர் ஒன்றே. இதற்கு பின்பே மற்றவை அனைத்தும் ஏனெனில் வெள்ளி (பணம்) செல்வங்கள் உண்ண இயலாது எதற்கும் உதவாது. கடினமான காலங்கள் தோன்றும் போது உயிர் என்பதே கடைசியாக பிரியும் சொத்தாக இருக்கின்றதால் அதற்கு மேல்தான் மனிதனுக்கு பற்று. அப்பற்றினை நீக்கிட முயற்சிகள் செய்திட வேண்டும்.