பாடல் #124

பாடல் #124: முதல் தந்திரம் – 1. உபதேசம்

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியும் அவரே சிவசித்தர் தாமே.

விளக்கம்:

பரவெளி மற்றும் உலகத்தைச் சுற்றியிருக்கும் வெற்றிட வெளிகளில் (ஆகாயம்) இறைவன் பரவி இருக்கும் முறைகளையும் உயிர்களிடத்தில் அன்பு அடங்கி இருக்கும் முறைகளையும் பேரொளியாக இருக்கும் இறைவனிடத்தில் சிற்றொளியாகிய ஆன்மாக்கள் சேர்ந்து இருக்கும் முறைகள் அனைத்தையும் தம் பேரறிவு ஞானத்தால் அறிந்து தெளிவாக உணர்ந்து இருப்பவர்களே சிவயோகியர்கள் எனப்படும் சித்தர்கள்.

2 thoughts on “பாடல் #124

  1. D.Guna Shekar Reply

    Respected sir,
    I would like to like to listen to all 30 songs of உபதேசம் continuously. Request you to kindly do the needful to enable this.
    Would be very grateful for the same.
    Regards
    D.Guna Shekar

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் வலைதளத்தில் இசை பகுதியில் அனைத்து பாடல்களும் கேட்கும் வகையில் உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.