பாடல் #113

பாடல் #113: முதல் தந்திரம் – 1. உபதேசம்

விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு
தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்ணின் றுருக்கியோ ரொப்பிலா ஆனந்தக்
கண்ணின்று காட்டிக் களிம்புஅறுத் தானே.

விளக்கம்:

வானத்தில் (அண்டத்தில்) வெவ்வேறு நிலைகளில் இருக்கும் ஆன்மாக்கள் உலகத்தில் இறங்கி வந்து அவரவர் வினைக்கு ஏற்ப பலவிதமான உடல்களை ஏற்றுப் பிறக்கும்போது அடியவர்களின் உள்ளம் குளிர்விக்கும் திருவடிகளை அவர்களின் தலைக்கு மேலே காவலாக வைத்து அவர்களின் உடலுக்குள்ளே உயிர்சக்தியாய் நின்று தான் யார் என்பதை உள்ளிருந்து உணரவைத்து உயிர்களுக்கு ஞானக்காட்சியய் தனது ஈடுஇணையில்லாத பேரானந்த நிலையைக் காட்டி அடியவர்களின் ஆன்மாவை மூடியிருக்கும் மும்மலங்களான ஆணவம் கன்மம் மாயை ஆகியவற்றை அகற்றி அருளுகின்றான் இறைவன்.

2 thoughts on “பாடல் #113

  1. Nandakumar Reply

    Your explantions are crisp and clear. I would like to download all the explanations of the entire Thirumanthiram, provided by you as it will make me independent of internet and help me avoid net connectivity issues. I can then read Thirumanthiram whenever I need to. Please advise me as to how I could download all the explanations provided vb you.

    • Saravanan Thirumoolar Post authorReply

      நன்றி இந்த வலைதளத்தில் புத்தகம் பகுதியில் 3 தந்திரங்கள் பிடிஎப் புத்தகங்களாக உள்ளது. இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.