பாடல் #154: முதல் தந்திரம் – 2. யாக்கை நிலையாமை
முப்பதும் முப்பதும் முப்பத் தறுவரும்
செப்ப மதிளுடைக் கோயிலுள் வாழ்பவர்
செப்ப மதிளுடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.
விளக்கம்:
மனித உடலில் தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழுகின்றன. இந்தத் தொண்ணூற்றாறு தத்துவங்களாலும் செய்யப்பட்ட மதிலாகிய உடல் சூழ்ந்த கோயிலுக்குள் ஆன்மாவாகிய உயிர் வாழுகின்றது. எப்போது அந்தக் கோயிலாகிய உடல் பழுதடைந்து கெட்டு உயிர் போகிறதோ அப்போது அதன் மதிலாக இருந்த தொண்ணூற்றாறு தத்துவங்களும் ஒன்றாக ஓடி விடுகின்றன.
96 தத்துவங்கள் – 25 பஞ்சபூத காரியங்கள், 5 வாசனாதிகள்/அவத்தைகள், 10 வாயுக்கள், 10 நாடிக்கள், 4 வாக்குகள், 3 மலங்கள், 3 குணங்கள்) 5 சிவ தத்துவம், 7 வித்யா தத்துவம், 24 ஆன்ம தத்துவம்.
இதன் (96 தத்துவம் சொல்லும்) பொருள் கொண்ட, இன்னும் ஒரு செய்யுள் கீழே கொடுக்கலாம்.