29-5-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
தினந்தோறும் வீட்டில் தீபம் ஏற்றுதல் வேண்டுமா?
பலருக்கும் இதில் மனக்குழப்பங்கள் உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று இல்லை சப்தமத்திற்கு (15நாட்களுக்கு ஒரு நாள்) ஏதேனும் ஒரு நாள் தீபம் ஏற்றினால் போதாதா என மனதில் தோன்றுகிறது. ஏனெனில் விளக்கேற்றுவதும் கிரியை (வேலை) அன்றோ? என கூறுகின்றனர். இது ஓர் தவறான அபிப்பிராயமாகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஈடானது தீபம் என்றும் அது வீட்டில் தினந்தோறும் காலை மாலை ஏற்றுதல் வேண்டும். காலையில் சூரியன் உதயமாகும் காலங்களிலும் பின்பு மாலை சந்திரன் வரும் காலங்களிலும் இதனை செய்தல் வேண்டும். அவர்களின் வருகையை போற்றும் வழியாக இதனை செய்கின்றோம். இதனை மறக்க வேண்டாம் மேலும் தீபத்தின் முழு அர்த்தங்கள் என்ன வென்றால் எவருக்கும் இருட்டில் இருப்பது பிடிப்பதில்லை ஏனெனில் இருட்டில் காண்பதெல்லாம் மாறி காண்கின்றோம். சிறிது அச்சம் தோன்றுகிறது. வெளிச்சம் வந்தவுடன் உண்மை விளங்குகிறது இதனால் அச்சம் தீருகின்றது அல்லவா? இது போல வாழ்க்கையிலும் நமக்கு தோன்றும் அச்சங்கள் விரட்டுவதற்கு தினந்தோறும் தீபங்கள் ஏற்றுதல் வேண்டும். இதற்கு நம்பிக்கை இல்லை என்பது ஒரு பெரும் காரியமல்ல தீபம் வெளிச்சம் கொடுக்கின்றது வெளிச்சம் என்பது அறிவு எனக்கு வெள்ளிக்கிழமையன்று மட்டும் அறிவு போதும் வெளிச்சம் போதும் என்பது சிறிது மடமையாக தோன்றுகிறது அல்லவா? இதுபோல் என்றும் அறிவு வேண்டும் வெளிச்சம் வேண்டும் என்றும் பயம் அகல வேண்டும் என்றும் ஆனந்தம் பெறுதல் வேண்டும் என்றால் காலை மாலை இரு முறையாவது ஓரு மணி நேரத்திற்காவது தீபத்தை ஏற்றுதல் வேண்டும்.