23-1-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கொடுத்த வாக்கு காப்பாற்ற இயலாதவர் வாக்கானது நீரில் எழுதியது போல் என்பார்கள் இதன் பொருள் என்ன? இதற்கு உள் அர்த்தம் உண்டா?
பொது அறிவின் வழியில் இதை சிந்திக்க நீரில் எழுதியது அவ்வடிவத்தில் நிலைப்பதில்லை என்றும் உடனடியாக மறைந்து விடுவதாக நாம் அறிகின்றோம், அத்தகைய நிலை தான் பொய்யரின் வாக்கும் இந்த வினாவின் விளக்கம் எளிதாகின்ற போதிலும் மறு விளக்கம் ஒன்று அளிக்க உள்ளோம். இத்தகைய நீர் என்கின்ற போதிலும் திருவருள் என்பது அதனுடன் சேர திருநீரில் எழுதியது அனைத்தும் நற்பலனைத் தரும். உலகத்தில் லட்சக்கணக்கான பூஜ்யங்கள் இருந்த போதிலும் இறையருள் என்கின்ற ஒன்று அதனுடன் சேர்ந்திடவே எண்ணிக்கை உண்டாகின்றது. இதனை மனதில் நிறுத்தி சிந்தித்து செயல்படுவதும் நன்றே ஏனெனில் திருவருள் இன்றி எதுவும் இல்லை திருவருள் இன்றி அனைத்தும் சூன்யமே என்ன வடிவங்களில் இறைவனை நீங்கள் வணங்கிய போதிலும் முடிவானது அனைத்தும் பிரம்மமே என்பதாகின்றது.