26-10-2007 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
மகான்களுக்கு ஜெயந்தியும் (பிறந்தநாள்) ஆராதனையும் (முக்தி அடைந்த நாள்) நல்வழியில் கொண்டாடப்படுகிறது இதில் எது முக்கியத்துமானது?
பொதுவாக ஆதியில்லாது அந்தம் இல்லை அந்தம் இல்லாமல் ஆதியும் இல்லை என்பது விதியாகும். இவ்விதம் பார்க்க இரண்டும் முக்கியமாகும். இருப்பினும் முக்கியத்துவம் காண்பது பிறப்பே ஆகும். பிறப்பு என்பது மானிடப் பிறப்பாகும். மானிடனாகப் பிறந்து பல பிறவி கண்ட பின்பே முக்தி நிலை அடைய முடிகிறது என்பதால் ஜெயந்தியே முக்கியத்துவம் ஆகும். அந்நாளில் மகான்களிடம் பெறும் வாழ்த்துக்களும் ஆசிகளும் பெருமளவில் நலம் தரும். ஆராதனை என்பதும் முக்தி என்பதும் ஓர் சாதனையின் நாளில் பக்தர்களும் மக்களும் முக்தி பெற்றவர்களை மட்டுமல்லாது அவரின் சாதனையையும் போற்றுகின்றனர். இந்நிலையில் முதன்மையில் வந்தது பிறப்பு, பின்பு வந்தது முக்தி என்பதால் முக்கியத்துவம் காண்பது முதலில் வந்த பிறப்பு ஆகும். சாதனையில் முக்தி பெரிதாக தோன்றினாலும் பிறவி இல்லையெல் முக்தி இல்லை.