அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #75

27-2-2012 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

தெய்வங்களை பெருமளவில் நம்பிட காரியங்கள் தடையாகி வீணாக சங்கடம் தருவதேன்?

தெய்வத்தின் கருணை பெரியதாம். சமயங்களில் நாம் ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடுகள் நமக்கு தகாததாகவும் சங்கடப் படுத்துவதாகவும் பிற்காலத்தில் துன்பத்தை விளைவிக்க கூடியதாகவும் இருக்க இதனை தவிர்த்தடவே இறைவன் கருணையால் தற்காலிக வருத்தம் தந்தும் பிற்காலம் சிறப்பாக அமைக்கவும் வழி வகுக்கின்றான். மாறாக சிலருக்கு பல வகையில் வாய்ப்புகள் அளித்த போதிலும் அதனை சீராக உபயோகிக்காமல் தாம் நினைப்பதே நடத்தல் வேண்டும் என்கின்ற மனப்பான்மை நிலைத்திட பெரும் வருத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய நிலையில் எது நடந்த போதிலும் அது இறையருள் என்று எடுத்துக் கொண்டால் சிறப்பாகவே அனைத்தும் நடைபெறும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.