பாடல் #30: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்
தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்
ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியை
நானின் றழைப்பது ஞானம் கருதியே.
விளக்கம்:
வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் பொதுவாக பெய்கிறது. அதுபோல இறைவனின் அருள் வேண்டிவர் வேண்டாதவர் என்றில்லாமல் அனைவரின் மீதும் இறையருள் கிடைக்கும் என்று எண்ணிக்கொண்டு இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள் எவ்வாறு கன்று தன் பசியை தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிக்கின்றதோ அதுபோலவே குருவான எம்பெருமான் சதாசிவமூர்த்தியை நான் வேண்டி அழைப்பது எமது ஞானப் பசியை அவர் தீர்க்கவேண்டும் என்கிற வேண்டுதலால்தான்.
பாடல் 30 ஆடியோ missing ஐயா
அப்லோடு செய்கிறோம் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி