பாடல் #10

பாடல் #10: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து

தானே இருநிலம் தாங்கிவிண் ணாய்நிற்கும்
தானே சுடும்அங்கி ஞாயிறுந் திங்களும்
தானே மழைபொழி தையலுமாய் நிற்கும்
தானே தடவரை தண்கட லாமே.

விளக்கம்:

சதாசிவமூர்த்தியாகிய தானே இந்த உலகைத் தாங்கிக் கொண்டு ஆகாயமுமாயும் இருக்கின்றான். அவனே சுடுகின்ற அக்கினிச் சூரியனாகவும் சந்திரனாகவும் உள்ளான். அவனே அருள் பொழியும் சக்தியுமாய் இருக்கின்றான். அவனே விசாலமான மலையாகவும் குளிரச்சியான கடலாகவும் உள்ளான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.