பாடல் #204

பாடல் #204: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)

இலைநல வாயினும் எட்டி பழுத்தால்
குலைநல வாங்கனி கொண்டுண லாகா
முலைநலங் கொண்டு முறுவல்செய் வார்மேல்
விலகுறு நெஞ்சினை வெய்துகொள் ளீரே.

விளக்கம்:

எட்டி மரத்தின் இலைகளும் பழுத்த பழங்களும் மிகவும் அழகாகவும் உண்பதற்கு மிகவும் நன்மையாகவும் கண்களுக்குத் தெரியும். ஆயினும் அதன் பழத்தை பறித்து உண்டு விட்டால் அது விஷமாக மாறி உயிரைக் குடித்து விடும். அது போலவே இளம் கன்னியர்களின் கவர்ச்சிகரமான முலைகள் மிகவும் அழகாகவும் இச்சையை தூண்டுவது போலவும் தெரியும். ஆயினும் அதைக் கண்டு கவனம் சிதறி செய்கின்ற செயலில் இருந்து விலகும் படி இருக்கின்ற ஆசை மனதை அது துயரப் பட்டாலும் பரவாயில்லை என்று அடங்கும் வரை போராடி வெற்றி கொள்ளுங்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.