பாடல் #207: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்புஅது வாமே.
விளக்கம்:
கையில் வைத்து கரும்பை நன்றாக அரைத்து பிழிந்து அதன் சாறை எடுத்து உட்கொண்டால் அது நாக்கில் படும்போது இனிப்பு போல தெரிந்தாலும் உடலுக்குள் சென்ற பிறகு அதன் விளைவானது வேப்பங் காயை உட்கொண்டது போல கசப்புத் தன்மையாகவே இருக்கும். அது போலவே உலகத்தில் உள்ள மடமையான மகளிரோடு இணைந்து உறவு கொள்ளும் போது அது இன்பம் போல தெரிந்தாலும் தமது மனதிற்குள் இறைவன் ஆதியிலேயே வைத்து இருக்கின்ற மனசாட்சியானது இது உண்மையான இன்பம் இல்லை இதனால் பின்பு துன்பமே விளையும் என்று காட்டிக் கொடுத்து விடும். அதனால் உண்மையான இன்பமாகிய பேரின்பத்தை அடைய வேண்டும் என்றால் இறைவன் மேல் உண்மையான அன்பு கொண்டு இருங்கள்.
