பாடல் #476: இரண்டாம் தந்திரம் – 14. கர்ப்பக் கிரியை (கரு உருவாகும் முறை)
வகுத்த பிறவியின் மாதுநல் லாளும்
தொகுத்திருள் நீக்கிய சோதி யவனும்
பகுத்துணர் வாகிய பல்வகை எங்கும்
வகுத்துள்ளும் நின்றதோர் மாண்பது வாமே.
விளக்கம்:
வினைப் பயனால் எடுக்கும் பிறவி எத்தகையது என்பதை முடிவு செய்து அதன்படி உயிர்களை படைக்கின்றது ஒலி வடிவமான சக்தி. வினைகளைக் கழிக்கும் உயிர்களுக்கு மாயையாகிய இருளை அகற்றி அருளுகின்றது ஒளி வடிவான சிவம். இவர்கள் இருவரும் இணைந்தே உயிர்களை ஓர் அறிவு ஜீவியிலிருந்து ஆறு அறிவு மனிதன் வரை வகை வகையாகப் பிரித்து அவர்களின் வினைகளுக்கு ஏற்ற வகையில் படைத்து அருளுகின்றார்கள். படைப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் அந்த உயிர்களுக்குள்ளேயும் உயிரோடு உணர்வாகக் கலந்து நிற்பதே சிவ சக்தியின் கருணையாகும்.