பாடல் #252

பாடல் #252: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.

விளக்கம்:

தினந்தோறும் இறைவனை வழிபட்டு அவனுக்கு படைக்க அன்போடு எந்தவொரு பச்சை இலையையோ வைத்தல் தினந்தோறும் பசுவின் பசிபோக்க ஒரு கட்டு புல்லை கொடுத்தல் தினந்தோறும் தினமும் சாப்பிடும் போது ஒரு கைப்பிடி உணவு தானம் செய்து விட்டு சாப்பிடுதல் தினந்தோறும் தாம் சந்திப்பவர்களிடம் அன்புடன் இனிமையாக பேசுதல் போன்றவை அனைவரும் எளிதில் செய்யக்கூடிய தருமங்களாகும்.

5 thoughts on “பாடல் #252

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் பாடல் பதிவுகள் தேவை என்று கேட்டிருக்கிறீர்கள். பதிவுகள் இந்த வலைதளத்தில் இருக்கிறது. வேறு என்ன கேட்கிறீர்கள் என்று எமக்கு புரியவில்லை.

Leave a Reply to Saravanan ThirumoolarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.