பாடல் #50: பாயிரம் – 1. கடவுள் வாழ்த்து
சூடுவன் நெஞ்சிடை வைப்பன் பிரான்என்று
பாடுவன் பன்மலர் தூவிப் பணிந்துநின்
றாடுவன் ஆடி அமரர்பி ரான்என்று
நாடுவன் நானின் றறிவது தானே.
விளக்கம்:
இறைவனின் திருவடிகளை என் தலைமேல் சூடிக்கொள்வேன். அவனின் திருவடிகளை என் நெஞ்சத்தில் வைத்துக்கொள்வேன். எம்பெருமான் என்று அவன் புகழ்களைப் பாடுவேன். பலவித மலர்களை அவன் திருவுருவத்தின் மேல் தூவி அவனைப் பணிந்து நின்று அவன் முன்னால் அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டே ஆடுவேன். ஆடியபின் அமரர்களின் தலைவனான இவனே எனக்கு முக்தியளிக்கக்கூடியவன் என்று அவனை நாடி அடைந்தபின் அனைத்தும் அவனே எனும் உண்மை ஞானத்தை அறிந்து அவனோடே கலந்து நிற்பேன்.
உள்விளக்கம்:
இறைவனை அடைந்து முக்திபெற மாபெரும் தவங்கள் யோகங்கள் யாகங்கள் இருந்தாலும் அவனது திருவடியை எண்ணத்தில் எப்போதும் வைத்து அவனைப் புகழ்ந்து பாடி ஆடி பலவித மலர்களைத் தூவி பூஜித்தாலே அவனை நாடி முக்தியை அடையலாம். இதுவே யாம் அறிந்த சிறந்த உபாயம் என்று திருமூலர் அருளுகின்றார்.
பாடல் மற்றும் விளக்கங்கள் background color dark கொடுத்து வெள்ளை எழுத்துக்கள் இருந்தால் படிக்க சுலபமாக இருக்கும்
தாங்கள் சொல்வது போல் செய்ய வேண்டுமென்றால் வலைதளத்தின் வடிவமைப்பு நிறைய மாற்றினால் மட்டுமே முடியும் அது தற்போது சாத்தியமில்லை. மாற்ற முயற்சிக்கிறோம்
அல்லது வெள்ளை background கறுப்பு எழுத்துக்கள் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்
தாங்கள் சொல்வது போல் செய்ய வேண்டுமென்றால் வலைதளத்தின் வடிவமைப்பு நிறைய மாற்றினால் மட்டுமே முடியும் அது தற்போது சாத்தியமில்லை. மாற்ற முயற்சிக்கிறோம்
நன்றி இறைவா நன்றி அய்யா
மிகவும் நன்றாக உள்ளது. பாடல்,பொருள்,இசை என எல்லாம் உயர்தரம். மனதை தொட்டது. வாழ்க உங்கள் பணி..
பாடல்கள், விளக்கங்கள் அனைத்தும் அருமை. நமச்சிவாய வாழ்க. வாழ்க வளமுடன்