பாடல் #784 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை
ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத் தொன்றாகிற்
கன்றிய நாளுங் கருத்துற மூன்றாகுஞ்
சென்றுயிர் நாலெட்டுஞ் சேரவே நின்றிடின்
மன்றியல் பாகு மனையில் இரண்டே.
விளக்கம் :
மூச்சுக்காற்று இடகலை நாடி வழியாக முப்பத்தொரு நாள் சென்றால் வாழ்நாள் மூன்று நாட்கள் மட்டுமே. முப்பத்திரண்டு நாள் சென்றால் இரண்டு நாளில் அவ்வுயிர் உடலை விட்டுச்செல்லும். சென்றவுடன் அவர் வாழ்ந்த இல்லத்தில் பலர் கூடி ஒலிக்கின்ற இயல்பு தோன்றும்.