பாடல் #303: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)
பெருமான் இவனென்று பேசி யிருக்கும்
திருமா னிடர்பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே.
விளக்கம்:
தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வம் ஒருவன் சிவன் என்பதை அறிந்து கொள்ள தனக்குள் பேசி கேள்வி கேட்டு கேள்வி ஞானத்தின் மூலம் பெரிய தவம் புரிந்த மானிடர்கள் தேவர்களாவதற்கு மகிழ்ந்து அருள் செய்கிறார் தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய ஆதியிலிருந்து இருக்கும் சிவபெருமான்.
குறிப்பு : அமைதியாக பேசாமல் அமர்ந்து இறைவன் யார் என்று தனக்குள்ளேயே கேள்வி கேட்டு இறைவன் அருளால் இறைவனை அடைவதும் பெரிய தவமே.