பாடல் #207: முதல் தந்திரம் – 9. மகளிரிழிவு (பெண்களின் மேல் கொண்ட காமத்தால் பெறும் இழிவு)
வையகத் தேமட வாரொடும் கூடியென்
மெய்யகத் தோருளம் வைத்த விதியது
கையகத் தேகரும் பாலையின் சாறுகொள்
மெய்யகத் தேபெறு வேம்புஅது வாமே.
விளக்கம்:
உலகத்தில் பெண்களுடன் மோகம் கொள்வதால் கிடைக்கும் பயன் என்று ஒன்றும் இல்லை. இது உண்மை ஞானத்தை உணர்ந்தவர்களின் உள்ளம் கண்ட விதியாகும். கையில் பணத்தை வைத்தால் கரும்புச்சாறு போல் இனிக்கப் பேசிப் பழகும் பெண்கள் அந்தப் பணம் தீர்ந்துவிட்டால் வேப்பங்காயாகக் கசந்து பேசி விலகுவார்கள். இத்தகையப் பெண்களின் மேல் மோகம் கொள்வது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் கசப்பு இதுவென்று அறிந்துகொள்ளுங்கள்.