பாடல் # 822 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
சொல்லலு மாயிடு மாகத்து வாயுவுஞ்
சொல்லலு மாகு மனல்நீர்க் கடினமுஞ்
சொல்லலு மாகும் இவையஞ்சுங் கூடிடிற்
சொல்லலு மாந்தூர தெரிசனந் தானே.
விளக்கம்:
பாடல் #821 இல் உள்ளபடி நெற்றியில் அமிர்தம் நிலைத்து நின்றால் கிடைக்கும் பயன்களைச் சொல்லப்போனால் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நிலம், நீர், நெருப்பு ஆகிய ஐந்தும் தமது உடலுக்குள்ளேயே அடங்கி இருப்பதை கண்டு கொண்ட யோகியர்கள் அண்டசராசரங்களில் பஞ்ச பூதங்களாக கலந்து நிற்கும் இறை சக்தியே தமக்குள்ளும் பஞ்ச பூதங்களாகக் கலந்து இருக்கின்றது என்பதை உணர்வார்கள். அந்த இறை சக்தியைத் தமக்குள்ளேயே தரிசிக்க முடியும் என்பதையும் சொல்லலாம்.