பாடல் # 805

பாடல் # 805 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)

மேலையண் ணாவில் விரைந்திரு காலிடிற்
காலனும் இல்லைக் கதவந் திறந்திடும்
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவான் பராநந்தி ஆணையே.

விளக்கம்:

அண்ணாக்கின் அருகில் உள்ள பகுதியில் இடகலை பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியே இயங்கும் மூச்சுக்காற்றை பயிற்சியின் மூலம் பொருத்தினால் யமன் பயம் இல்லை. உடலுக்கு அழிவு இருக்காது. மேலுலகத்து வாயிற் கதவு திறக்கும். நரை திரைகளும் மாறிவிடும். அதன்பின் யோகி உலகம் அறிய இளமைத் தோற்றத்தையும் உடையவனாவான். இது குருவான இறைவன் மேல் ஆணையாகச் சொல்லுகின்ற உண்மை.

One thought on “பாடல் # 805”

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.