பாடல் #785 : மூன்றாம் தந்திரம் – 15. ஆயுள் பரிட்சை
மனையில்ஒன் றாகும் மாதமு மூன்றுஞ்
சுனையில்ஒன் றாகத் தொனித்தனன் நந்தி
வினையற வோங்கி வெளிசெய்து நின்றால்
தனையுற நின்ற தலைவனு மாமே.
விளக்கம் :
உயிர் முதலில் உடலோடு சேர்ந்து தாயின் வயிற்றில் ஒன்பது மாதம் உருப்பெற்று வளர்ந்து பத்தாம் மாதம் நீரில் மிதந்து பத்தாம் மாத இறுதியில் அவ்விடத்தை விட்டு திருவருள் உணர்வோடு வெளியே வந்து வினைகளை எல்லாம் தீர்த்து தான் யார் என்பதை உணர்ந்து நின்றால் உலகிற்கு தலைவனாகவும் கூடும் என்று நந்தி பெருமான் கூறியுள்ளார்.