3-10-2011 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
ஞானிகள் சினம் (கோபம்) கொள்வது சரியா?
உறுதியாகச் சரி இல்லை என்கின்ற போதிலும் காரண சினம் என்று ஒன்று உண்டு இந்தக் காரண சினம் தவறாகாது. மேலும் காரண சினத்திற்குக் காரணமாக இருப்பவர் செய்வது மாபெரும் தவறாகும். காரண சினம் என்பது ஓர் காரியத்திற்காகச் சினம் கொள்வது என்கிற போதிலும் இது சினம் போல் ஓர் தோற்றமாகும். காரணத்திற்காகச் சினம் கொள்வது போல் உள்ளது என்றும் கூறுவார்கள். இருப்பினும் அச்சினத்திற்குக் காரணமானவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் செல்லும் வழி கடினமாகும்.