பாடல் # 820 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
பையினி னுள்ளே படிக்கத வொன்றிடின்
மெய்யினி னுள்ளே விளங்கும் ஒளியதாங்
கையினுள் வாயுக் கதித்தங் கெழுந்திடின்
மையணி கோயில் மணிவிளக் காமே.
விளக்கம் :
உடலில் உள்ள மூலாதாரக் கதவு குதம் (எருவாய்) ஆகும். அதை கேசரி யோகத்தின் மூலம் இருகால்களால் அணைத்து சுருக்கினால் அபானன் அமுக்கப்படும். அபானன் தன் திசையை மாற்றிக் கொண்டு மேல் நோக்கிப் போகும். உயிர்ப்பை மாற்றி மேலே செல்லும் போது உடல் ஒளியுடன் விளங்கும். அபானன் நாடியினுள் மேலே எழும் போது மலங்கள் நிறைந்த உயிர் ஒளி உடையதாக இருக்கும்.
வணக்கம் வாழ்க வளமுடன் இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க அன்பே சிவம் எல்லாம் சிவ மயம் திருச்சிற்றம்பலம்