பாடல் #589

பாடல் #589: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடுந்
தொலையாத ஆனந்தச் சோதிகண் டேனே.

விளக்கம்:

மலை போன்ற தலையின் உச்சியில் வானத்திலிருந்து வரும் மழை போல அமிர்தம் எப்போதும் பொழிந்துகொண்டு இருக்கின்ற சுழுமுனை நாடியின் வழியாக மனதைச் செலுத்தி அம்பலத்தில் ஆடும் சிவபெருமானின் என்றும் தெவிட்டாத பேரின்பம் தரும் ஆனந்தக் கூத்தைக் கண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.