25-9-2010 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: ஆத்மா சுதந்திரமாக இருக்க வேண்டுமென கூறினால் ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஏன் பல கட்டுப்படுகள் விதிக்கப்படுகிறது?
சுதந்திரம் என்பது அடக்கம் இல்லை. கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை என்பதே பொருள். ஆத்மா விடுதலை பெற வேண்டும் என்றால் ஐம்புலன்களின் பிடியிலிருந்து விடுதலை பெறுதல் வேண்டும் என்பதே பொருள். இத்தகைய நிலையில் ஆத்மா உண்மையாக சுதந்திரம் பெற வேண்டும் என்றால் தானாக சுயமாக சில கட்டுப்பாடுகள் விதித்து ஐம்புலன்களின் பிடியிலிருந்து ஆசாபாசங்களிலிருந்தும் தப்பித்து விடுதல் வேண்டும்.