திருமந்திரம் பாடல் # 845 முதல் 850 வரை உள்ள ஆறு அமுரி தாரணை பாடல்கள் பற்றி பலர் பல கேள்விகள் கேட்டுள்ளார்கள். அதற்கான சிறு விளக்கம் இது. பாடலில் உள்ள விளக்கத்தின்படி அமுரி நீர் என்பது சுக்கிலம் மற்றும் திரோணிதம் ஆகும். இதனை 8 ஆண்டுகள் பிராணாயாமம் மற்றும் அகயோக பயிற்சிகள் மூலம் பயிற்சி செய்து தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பது அமுரி தாரணை ஆகும். அமுரிநீரை தலை உச்சியில் கொண்டு சென்று நிலைத்திருக்க வைத்தால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் இருக்கலாம். இந்த அமுரி நீரை திருமூலர் சிவநீர் என்று குறிப்பிடுகிறார்.
சிவன் சொத்து குலநாசம் என்று ஒரு தத்துவம் நமது ஆன்மீகத்தில் உள்ளது. அதற்கு சரியான அர்த்தம் இப்பாடல்களே. சிவன் சொத்து என்பது சிவநீரான சுக்கிலம் ஆகும் இதனை மகளிருடன் போகத்தின் மூலம் விரையம் செய்தால் சந்ததியினர் உருவாகி குலம் விரித்தியடையும். இந்த சிவநீரை யோகப்பயிற்சிகள் மூலம் தலை உச்சிக்கு கொண்டு சென்று நிலைத்திருக்க வைப்பதினால் முதுமை தன்மை மறைந்து இளமையுடன் எப்போதும் பேரின்பத்தில் இருக்கலாம். அதனால் சாதகருக்கு வாரிசு இருக்காது. சந்ததியினர் இல்லாமல் குலம் நாசமாகிறது. இதுவே சிவன் சொத்து குலநாசம் என்பதன் முழு அர்த்தமாகும்.
முதல் பாடலில் சொல்லப்பட்டது. சூரிய உதயத்திற்கு முன்பாக விடப்படும் சிறுநீர் தான் அமுதம் சர்வ ரோக நிவாரணி சிவ நீர் என்றும் சொல்லப்பட்டது. அனுபவித்தவர் நான். 27 ம் வயதிலிருந்து தற்போது 70 மருத்துவர்களை பார்ப்பதில்லை.
ஐயா வணக்கம் தாங்கள் சொல்லியது போல் சிறுநீர் சர்வரோக நிவாரணி என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் திருமந்திரம் பாடலில் கூறப்பட்டுள்ள அமுரி தாரணை சிறுநீரை கூறிப்படவில்லை. ஏனெனில் அமுரி தாரணை தலைப்பின் முதல் பாடல் 845ல் உள்ள விளக்கத்தின் படி உப்பு நீருக்கு அருகே என்று பாடலின் விளக்கத்தின் படி சிறுநீர் உப்பு நீராகும் அதன் அருகில் என்று தான் பாடலில் இருக்கின்றது. ஆகவே அமுரி தாரணை என்பது சிறுநீர் இல்லை
பாடல் #845: மூன்றாம் தந்திரம் – 20. அமுரி தாரணை
உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்
கடலிற் சிறுகிணற் றேமிட் டாலொக்கும்
உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில்
நடலைப் படாதுயிர் நாடலு மாமே.
விளக்கம்:
குடிக்க முடியாத உப்பு நீரைக் கொண்ட கடலுக்கு அருகே ஒரு சிறு கிணறு தோண்டி ஏற்றம் இறைத்தால் சுத்தமான குடிநீர் வருவதைப் போலவே உயிர்களின் உடல் கழிவு உப்புக்கள் நிறைந்த சிறுநீருக்கு அருகிலேயே ஆற்றல் மிக்க அமுரி நீர் இருக்கிறது. அதை சிறுநீருடன் கலந்து வெளியேற்றி வீணாக்காமல் மேல் நோக்கி சுழுமுனை நாடிவழியே எடுத்துச் சென்றால் என்றும் அழியாமல் உயிர் நிலைத்து நிற்கும்.
பெண்ணினுடைய மதுவையுங் கூட்டி சேர்க்கவும்
இதற்கு என்ன அர்த்தம் என்ன ஐயா
இந்த வார்த்தை திருமந்திரம் பாடல் அல்லது எமது விளக்கத்தில் எந்த இடத்தில் வருகிறது.