பாடல் #59: பாயிரம் – 3. ஆகமச் சிறப்பு
பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்
அண்ட முதலான் அரன்சொன்ன வாறே.
விளக்கம்:
இறைவனை அடைய ஆகமங்கள் கூறும் பதினெட்டு நிலைகளையும் அதன் உண்மையையும் உணர்ந்தவர்கள் பண்டிதர்கள் ஆவார்கள். இந்தப் பதினெட்டு நிலைகளையும் அரன் எனும் பெயரால் அறியப்படுபவனும் உலகங்கள் அனைத்திற்கும் முதல்வனுமான இறைவன் கூறியவையாகும். இறைவன் கூறியவற்றை அவன் கூறியபடியே விளக்குபவர்களே உண்மையான பண்டிதர்கள் ஆவார்கள்.
பதினெட்டு மொழிகள் யாவை
இப்பாடலில் பதினெட்டு நிலைகள் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. மொழிகள் என்று சொல்லப்படவில்லை.