பாடல் #566: மூன்றாம் தந்திரம் -5 பிராணாயாமம்
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டாற்
கள்ளுண்ணவும் வேண்டாந் தானே களிதருந்
துள்ளி நடப்பிக்குஞ் சோம்பு தவிர்ப்பிக்கும்
உள்ளது சொன்னோம் உணர்வுடை யோர்க்கே.
விளக்கம்:
பறவையை விட வேகமாகச் செல்லக்கூடிய சுவாசத்தை பிராணாயாம் செய்து தலையிலுள்ள சகஸ்ரதளத்தை நோக்கி எடுத்துச் சென்றால் கள் (போதைப்பொருள்) அருந்தாமலேயை மனம் மகிழ்ச்சி (தன்னை மறந்த நிலை) அடையும். உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். உடல் சோர்வு நீங்கும். இறைவனை உணர வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கே இந்த உண்மையை கூறுகிறோம்.
ஆம்.பிராணயாமம் முறையாகச் செய்பவர்க்கே அப்பிராமானந்தம் கிட்டும்.பறவை பறக்கும்போது எழாத லப் டப் ஓசை பறவையை விட வேகமாக ஓடும் குதிரையின் ஓட்டத்தின் போது ஏற்படுவதால் , குதிரை ஓட்டத்தை பிராண ஓட்டமாகக்கருதப்பட்டது.
கள் உண்ணாமலேயே மயக்கத்தையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கவல்லது பிராணயாமம்.
மூளையின் வேதித்தூதர்களாக விளங்கும் ஏழு வகை நரம்பிழை நியுரான்கள் கிளர்வேற்றப்படுகின்றன என்பதுதான் மூளை வேதியியல் உண்மை. உயிர் வேதியியல் நரம்பியல் சார்ந்த உன்னத படைப்பு தான் என்பதை திருமூலரின் திருமந்திரம் தெளிவு படுத்துகிறது. இதைப்போன்ற மாபெரும் அறிவியல் மெய்யியல் படைப்பு வேறு மொழிகளில் உள்ளதா??