பாடல் #1255: நான்காம் தந்திரம் – 9. ஏரொளிச் சக்கரம் (மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி எழுகின்ற ஒளி வடிவான சக்கரம்)
ஏரொளி யுள்ளெழு தாமரை நாலிதழ் ஏரொளி விந்துவி னாலெழு நாதமாம் ஏரொளி யக்கலை யெங்கும் நிறைந்தபின் ஏரொளிச் சக்கர மந்நடு வன்னியே.
விளக்கம்:
உயிர்களுக்குள் இருக்கும் மூலாதாரமானது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை மலர் வடிவத்தில் சக்திமயமான சக்கரமாக இருக்கின்றது. அதை தியானம் தவம் ஆகிய சாதகங்களின் மூலம் மாற்றி அமைக்கும் போது அதிலிருக்கும் குண்டலினி சக்தியானது எழுச்சி பெற்று சுழுமுனை நாடி வழியே மேலெழுந்து வரும் போது பிரகாசமான வெளிச்சமாக வருகின்றது. அந்த வெளிச்சத்திலிருந்து சத்தம் வெளிவருகின்றது. இந்த வெளிச்சமும் சத்தமும் சுழுமுனை நாடியின் அடியிலிருந்து உச்சித் துளை வரை முழுவதும் நிறைந்து நிற்கும் போது அதன் நடுவில் அக்னியாக இருக்கும் சுடரே ஏரொளிச் சக்கரமாகும்.
திருமந்திரம் முதல் தந்திரத்தில் 21 ஆவதாக உள்ள “கேள்வி கேட்டு அமைதல்” தலைப்பைப் பற்றி “திருமந்திரத் திண்ணை” எனும் குழுவில் Zoom நேரலையில் 22-08-2021 அன்று நிகழ்த்திய கலந்துரையாடல்.
பாடல் #1255 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் நடுவில் ஏரொளிச் சக்கரமாக இருக்கும் அக்னியின் எழுத்தானது ஒளி ஒலி வடிவத்தில் மிகப்பெரும் சக்திகளாக இருக்கின்றன. இந்த மாபெரும் சக்திகளே ஆகாயம் வரை நீண்டு வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த சக்திகளே மிகவும் பெரிய சக்தி மயமாக இருக்கின்றன. இந்த சக்திகளின் எழுத்துக்களை சரியாக வடிவமைக்கும் வழிமுறைகளை ஏரொளிச் சக்கரமே உள்ளிருந்து அறிய வைக்கின்றது.
கருத்து:
ஏரொளிச் சக்கரம் ஒளி ஒலி வடிவத்தில் இருக்கின்ற எழுத்துக்களை சரியாக அமைக்கும் வழி முறையை உள்ளுக்குள் இருந்து அறிவுறுத்தும். அந்த வழி முறைகளை சரியாக கடைபிடிக்கும் சாதகர்கள் இறைவனின் பேரொளியோடு இணைந்து விடுவார்கள்.
மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிரொன்று நூறுடன் கூறிட்டு மேவியது கூறது ஆயிரமானால் ஆவியின் கூறு நூறாயிரத்தொ ன்றாமே. திருமந்திரம் பாடல் # 2011
முதலில் ஒரு மாட்டின் முடியை எடுத்து அதை 100 ஆக பிரிக்க வேண்டும். அந்த 100 இல் ஒன்றை எடுத்து அதை ஆயிரமாக பிரிக்க வேண்டும். அந்த ஆயிரத்தில் ஒன்றை எடுத்து நூறாயிரம் ஆக பிரிக்க வேண்டும். கணக்கின் பாடி பார்த்தால் ஒரு மாட்டின் முடியை ஆயிரம் கோடி இழைகளாகப் பிரிக்க வேண்டும். இது அணுவைப் பிளப்பது போலத்தான். ஒரு மனிதனின் முடியானது 40-80 மைக்ரோனாக உள்ளது. பசுவின் முடியானது சிறிது அடர்த்தியாகவே இருக்கும். எனவே 100 மைக்ரோன் என்றே எடுத்துக் கொள்வோம்.
100 மைக்ரோன் = 0.1 மில்லிமீட்டர்
பசு மாட்டின் ஒரு முடியை நூறாகப் பிரித்தால் 0.1 மில்லி மீட்டர் இதனை 100 ஆக பிரித்தால் = 0.001 மில்லி மீட்டர்
0.001 மில்லி மீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.000001 மில்லி மீட்டர்.
0.000001 மில்லி மீட்டர் இதனை நூறாயிரமாகப் (100,000) பிரித்தால் = 0.00000000001 மில்லிமீட்டர்
திருமூலர் உயிரின் அளவாகக் குறிப்பிடுவது சராசரியாக 0.00000000001 மில்லிமீட்டர்.
தற்போதைய விஞ்ஞானம் ஒரு ஹைட்ரோஜென் அணுவின் சுற்றளவு 0.000000212 எனப் பிரித்திருக்கின்றது. திருமூலர் அதற்கும் கீழே சென்று ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லி மீட்டராகக் திருமூலர் கூறியிருக்கின்றார்.
அணுவிற்குள் அணுவாகவும் அதற்கு அப்பாலும் இருப்பவன்தான் இறைவன். அப்படி அணுவிற்குள் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறு செய்து அந்த ஆயிரத்தில் ஒரு கூறினை நெருங்க வல்லவர்களுக்கு அணுவிற்குள் அணுவாய் இருக்கின்ற இறைவனை அணுகலாம்.
ஜீவாத்மாவுக்கு கூறப்பட்ட அணுவின் வடிவத்தை ஆயிரம் கூறுகளாக்கிக் கிடைப்பது இறைவன் வடிவம் என்று கூறுகின்றார்.
ஜீவாத்மாவின் அளவு 0.00000000001 மில்லிமீட்டர் இதனை ஆயிரமாகப் பிரித்தால் = 0.0000000000000001
மனிதனின் ஜீவாத்மா 0.00000000001 மில்லிமீட்டர் அளவு இருக்கும். இந்த ஜீவாத்மா அணுக்களுக்குள் அணுவாக இறைவன் இருப்பதாகக் கூறுகின்றார். அணுவிற்குள் மனித ஜீவாத்மா இருப்பதாகவும் அதை ஆயிரம் மடங்கிற்கும் மேல் பிளக்கும் போது அதில் இறைவன் இருக்கிறான் என்றும் திருமூலர் கூறியிருக்கின்றார்.
பாடல் #1228 இல் உள்ளபடி இறைவனை அடைவதற்கு செல்லுகின்ற செம்மையான வழிமுறையாக இருக்கும் சன்மார்க்கமே அனைத்து சமயங்களும் இறைவனை அடைவதற்கு தருகின்ற பலவித வழிகளாக இருக்கின்றது. பொய்யான வழிகள் அனைத்தும் உண்மையான ஞான வழியில் நடப்பவர்களை விட்டு தானாகவே விலகி விடும். நன்மையான வழிகளை அருளி காப்பாற்றுகின்ற அனைத்து விதமான தேவர்களாகவும் நன்மையான வழிமுறையாகவும் உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அருட் சக்தியாகவும் ‘சக்தி’ என்று எந்த அடைமொழியும் இல்லாமல் அழைக்கப்படுகின்ற இறைவியே இருக்கின்றாள்.
பாடல் #1229 இல் உள்ளபடி உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அசையும் சக்தியாகிய இறைவியும் ஆன்மாவும் தானாகவே இருக்கின்ற அசையா சக்தியாகிய இறைவனும் இல்லாமல் முக்திக்கான ஆரம்பம் எது என்பதை அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. மூலாதார சக்தியின் மீது மூச்சுக்காற்றைச் செலுத்தி தியானம் செய்தால் அந்த மூலாதார சக்தியானது சக்தியூட்டம் பெற்று அதன் பிறகு மூச்சுக்காற்றின் மூலம் உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடித் துளை வழியே மேலே ஏறிச் சென்று சகஸ்ரதளத்தை அடைவதே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.
கருத்து:
முக்திக்கான ஆரம்ப நிலையை அறிந்து கொள்ள ஒன்று இறைவியைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது ஆன்மாவாக இருக்கும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது அசையா சக்தியாக இருக்கின்ற இறைவனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று வழிகளிலும் தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இருக்கும் இன்னொரு வழியே குண்டலினி யோகம். அதையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை. அத்திப் பழத்தின் தன்மையில் அது பூப்பதையோ காய்ப்பதையோ யாரும் பார்க்க முடியாது அது பழுத்த பிறகே தெரிய வரும். அதுபோலவே மூலாதார சக்தியானது சக்தியூட்டம் பெறுவதையோ அது மேலேறிச் செல்வதையோ யாரும் அறிந்து கொள்ள முடியாது ஆனால் அது சகஸ்ரதளத்தை அடைந்த பிறகு அங்கிருக்கும் இறை சக்தியை உணர்ந்து கொள்ள முடியும் அதுவே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.
பாடல் #1230 இல் உள்ளபடி முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் சரியான வழியை தெரிந்து கொள்ளாமல் அது என்றும் இது என்றும் பலவிதமான வழிகளில் சென்று வாழ்நாட்களை வீணாகக் கழிக்காமல் அடியவர்களை மயக்கும் தேன் கொண்டு மலர்ந்து இருக்கும் நறுமணம் மிக்க பூக்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலுடன் என்றும் இளமையுடன் இருக்கும் நன்மையின் வடிவான இறைவியும் அவளோடு சேர்ந்து இறைவனும் தமக்குள் வீற்றிருக்கும் சகஸ்ரதளத்தில் தமது குண்டலினி சக்தியை பாடல் #1230 இல் உள்ளபடி சுழுமுனை நாடியின் வழியே மூலாதாரத்திலிருந்து மேலேற்றிச் சென்று சேர்த்து அங்கிருக்கும் அமிழ்தத்தைப் பருகி அங்கிருக்கும் இறைவனையும் இறைவியையும் உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களுக்கு அவர்களின் விதி என்று சொல்லப்படும் அனைத்து கர்மங்களையும் ஆணவத்தையும் மாயையும் வென்றுவிட முடியும்.
பாடல் #1231 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் உண்மையாக உணர்ந்து அவர்களைப் பணிந்து வணங்க முடிந்தவர்களால் விதியென்று சொல்லும் அனைத்து கர்ம வழிகளையும் அதனால் இருக்கும் ஆணவத்தையும் மாயையும் வினையினால் உருவாகும் பெரும் பந்த பாசத்தையும் ஆசையை உருவாக்கி மயக்குகின்ற ஐந்து புலன்களையும் அதனால் வருகின்ற ஆசைகளையும் வென்று விட முடியும்.
பாடல் #1232 இல் உள்ளபடி உண்மையான ஞானத்தை உணர்ந்து தெளிந்தவர்கள் அறிந்து கொண்ட மெய்யுணர்வாக இருக்கின்ற ஐம்பத்தோரு அட்சரங்களாகவும் அந்த அட்சரங்களுக்கு தேவதைகளாக பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக வந்து கொண்டு இருக்கின்ற அனைத்து தேவர்களுக்குள்ளும் ஒன்றாகக் கலந்து நிற்பது பரம்பொருளாகும். அந்தப் பரம்பொருளும் நறுமணமும் மருத்துவ குணமும் கொண்ட கோடக மலர்களைச் சூடியிருக்கும் கூந்தலைக் கொண்ட இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற மெய்யுணர்வு பெற்றவர்களுக்கு அருளுகின்ற திருவடிகளாகவும் சத்தியத்தின் உருவமாகவும் இருக்கின்றது சிவசக்தியே ஆகும்.
பாடல் #1233 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற சாதகர்கள் சத்தியத்தின் உருவமாக இருக்கின்ற இறைவியோடும் தாமாகவே தோன்றி எப்போதும் இருக்கின்ற இறைவனோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்ற உண்மையான ஞானத்தை உணர்ந்து விட்டால் விதை போட்டால் பயிர் வளரும் என்கிற உலக நியதிக்கு எதிராக விதை போடாமலே அனைத்து பயிர்களும் விளைந்து விடும் அதிசயம் போல அனைத்து ஞானங்களும் அவர் முயற்சி செய்யாமலேயே இறையருளால் அவருக்கு கிடைக்கப் பெறும். அது போலவே பாடல் #1224 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஐம்பத்தோரு அட்சரங்களும் அவற்றுக்கு அதிபதியான தேவர்களும் அவரின் சித்தத்தில் இருக்கும் சிவத்தோடு கலந்து அவரின் சிந்தனைக்குள் இருக்கும் அனைத்து மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே அவர் மாறிவிடுவார்.