திருமூலர் வழிபாட்டு பாடல்

சர்வமங்கள குருதேவா
சிவப்பிரியா மகாதேவா
ஞானரூபா அருள்தேவா
சத்குருவே நமோநமஹ

கைலாச வாசமது கண்டனயே
சிவலோக அருள்யாவும் பெற்றனயே
நட்பினை நாடி வந்தனயே
தில்லையில் தாண்டவம் கண்டனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

கோக்களின் துயரம் தீர்த்தனயே
சுந்தரன் உடல்தனை இழந்தனயே
இடையன் உடல்தனை ஆட்கொண்டனயே
திருமூலர் என நாமம் பெற்றனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

திருவாவடுதுறை தலமது அடைந்தனயே
கோமுக்தீஸ்வரர் ஆலயம் கண்டனயே
இங்கும் தவக்கோலம் பூண்டனயே
ஆண்டுகள் மூவாயிரம் அமர்ந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

ஆண்டுக்கோர் முறை விழித்தனயே
பாடல் ஒன்றினை அளித்தனயே
இவ்விதம் மந்திர மாலையும் படைத்தனயே
திருமந்திரம் மூவாயிரம் தந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா

பின் உடல்தனை விட்டும் பிரிந்தனயே
தில்லைநாதனுடன் காலந்தனயே
நந்தியில் தஞ்சம் கொண்டனயே
இன்றும் இங்கும் அருள்புரிந்தனயே

ஹர ஹர ஹர ஹர குருநாதா
சிவ சிவ சிவ சிவ குருதேவா.

குருநாதர் கே.வி. நாராயணன்
ஆதி அருணாச்சலசித்தர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.