பாடல் #592: மூன்றாம் தந்திரம் – 7. தாரணை (பிரத்தியாகாரம் மூலம் உள்ளே ஒருநிலைப்படுத்திய மனதை நிலைத்திருக்க வைத்தல்)
கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கங்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடன் காலமும் நிற்குமே.
விளக்கம்:
உயிருடன் கலந்த உடலினுள்ளே செல்லும் மூச்சுக்காற்றைத் தெரிந்துகொண்டு அந்த மூச்சுக்காற்றுடன் உயிருக்கும் உடலுடக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தி அந்த மூச்சுக்காற்றை வெளியே சென்றுவிடாமல் அடக்கி வைத்திருந்தால் அந்த மூச்சுக்காற்று உயிருடன் கலந்த உடலோடு எப்போதும் கலந்து இருக்கும்.