நல்வரவு

திருமூலர் தேவ நாயனார்

வணக்கம் அன்பர்களே

இந்த வலைத்தளத்திற்கு தங்களை அன்போடு வரவேற்கிறோம்.

இந்த வலைத்தளம் எமது குருநாதர் திருமூலர் அவர்கள் அருளிச்செய்த தமிழ் வேதமும் பூலோக அமிர்தமுமான திருமந்திரம் நூலை விளக்கத்தோடு கொடுக்கவும், குருநாதர் திருமூலர் அவர்கள் வழங்கிய சில கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவும் மற்றும் எமது நிகழ்ச்சிகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வலைத்தளம் முழுவதும் படித்து குருநாதரின் அருளைப் பெறுமாறு உங்களை அன்போடு கேட்டுக்கொள்கின்றோம். இந்த வலைத்தளம் பற்றிய உங்களுடைய கருத்துக்களை இந்த பக்கத்திலும் உங்களுடைய கேள்விகள் ஏதேனும் இருந்தால் அதை இந்த பக்கத்திலும் அனுப்பவும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

மிக்க அன்புடன்,

சரவணன் த.

58 thoughts on “நல்வரவு

    • Sumathi Reply

      அன்புள்ள அய்யா, தங்களின் மேலான பணி தொடரட்டும். உங்கள் சேவை அரிய பொக்கிஷம் ஆகப்போவது திண்ணம்.

      எனக்கும், எனது தோழிகளுக்கும் திருமந்திரம் (zoom) வகுப்பு எடுப்பீர்களா?
      விவரம் தெரிவிக்கசும். நன்றி
      சுமதி
      sumirag2003@yahoo. co uk

      • Saravanan Thirumoolar Post authorReply

        வணக்கம் திருமந்திர வகுப்புகள் வாரம் 2 வகுப்புகளும் மாதம் 2 வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் இலவச வகுப்புகள் தாங்கள் இணைந்து கொள்ளலாம். தங்களுக்கு திருமந்திர வகுப்பு தனியாக எடுக்க வேண்டும் என்று விரும்பினால் தாங்கள் மற்றும் தங்களின் தோழிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தனியாக வகுப்பு எடுக்கிறோம். மேலும் விவரங்களுக்கு எமது போன் எண்ணைதொடர்பு கொள்ளவும் நன்றி

  1. Thirunanthy Reply

    திருமந்திரம் பற்றி மிகவும் ஆழமாக அறிய முடிகின்றது, பாடல்களோடு இலகுவாக. நன்றி

  2. பாலாஜி நடராஜன் Reply

    வணக்கம், உங்களின் பதிவு மூலம் திருமந்திரத்தை படித்து,விளக்கத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.நன்றி

  3. V.THANIGAINATHAN Reply

    வாடஸ் ஆப் ல் திருமந்திர பதிவுகள் மட்டுமே
    எதிர்பார்க்கிறேன்

    • Saravanan Thirumoolar Post authorReply

      குருப்பில் இருக்கும் பலருடன் கலந்தாலோசித்து இது பற்றி முடிவெடுக்கிறோம் நன்றி.

      • Sumathi Reply

        அய்யா, எனக்கும் என் தோழிகளுக்கும் திருமந்திரம் (zoom ) வகுப்பு எடுக்க முடியுமா?

        • Saravanan Thirumoolar Post authorReply

          வணக்கம் திருமந்திர வகுப்புகள் வாரம் 2 வகுப்புகளும் மாதம் 2 வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்தும் இலவச வகுப்புகள் தாங்கள் இணைந்து கொள்ளலாம். தங்களுக்கு திருமந்திர வகுப்பு தனியாக எடுக்க வேண்டும் என்று விரும்பினால் தாங்கள் மற்றும் தங்களின் தோழிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் தனியாக வகுப்பு எடுக்கிறோம். மேலும் விவரங்களுக்கு எமது போன் எண்ணைதொடர்பு கொள்ளவும் நன்றி

  4. Mrs K.Manimegalai Reply

    Ver happy to listen to the music form of ThiruManthiram . Thanking God For the opportunity to listen . Beautuful voice of Thiru Veeramany Avarkal.Many thanks again for the good effort

  5. Jagandhan Reply

    ஐயா . எனக்கு திருமந்திரம் புத்தகம் வேண்டும்

    • Saravanan Thirumoolar Post authorReply

      இந்த வலைதளத்தில் மின் புத்தகங்கள் பகுதியில் 4 தந்திரங்களுக்கான PDF புத்தகங்கள் உள்ளது. அதனை டவுண்லோடு செய்து பிரிண்டு எடுத்துக் கொள்ளலாம். அனைத்து தந்திரங்களும் புத்தகமாக வேண்டுமெனில் தண்டபாணி தேசிகர் விளக்கம் எழுதிய புத்தகங்கள் திருவாவடுதுறை ஆதினத்தின் சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. அவர்களை தொடர்பு கொண்டால் கொரியர் அனுப்பி வைப்பார்கள்.
      திருவாவடுதுறை ஆதீனம்
      சரஸ்வதி மகால் நூல் நிலையம்
      திருவாவடுதுறை-609803.
      செல்போன்: 9487713042. இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஆன்லைனில் பணம் செலுத்தினால் தங்களுக்கு தேவையான புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள்.

  6. M.Rajesh kannan Reply

    சரவணன் சார் உங்கள் தொடர்பு எண் தாருங்கள்

    • Saravanan Thirumoolar Post authorReply

      எமது தொடர்பு எண் 9677074974 வலைதளத்திலேயே தொடர்பு கொள்க பகுதியில் எமது தொடர்பு எண் மற்றும் மெயில் ஐடி இருக்கிறது.

  7. Mohan Thulasingam Reply

    விஞ்ஞானத்தின் இலக்கு மெய்ஞ்ஞானமாக ஆகிவிட்டால், அன்பு மற்றும் அமைதி தழைத்தோங்கி எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கும். இதுவே திருமந்திரத்தில் விளக்கப்படுவதாக கருதுகிறேன்.
    தங்களுடைய ஒப்பற்ற பணியினை வணங்கி, நன்றியுடன் வாழ்த்துகிறேன்.

  8. Shanmugam A Reply

    இந்த பாடல் மிகவும் சிறப்பாக இருந்தது

  9. Ramesh Vaikundavasan Reply

    இரமேஷ் வைகுண்டவாசன்…
    எங்கும் தூய்மை, எங்கும் மெய்யின் ஊற்று, எங்கும் ஈசன் அருள், மெய்பொருள் காண தூய்மை யான கருவி இந்த படைப்புகள்…!
    வாழ்க சரவணா…! நின் தொண்டு வளர்க சரவணா…!!

    • சுவாமிநாதன் Reply

      ஐயா பாடல்களை mp3 டவுன்லோட் செய்யும் வசதி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செய்வீர்களா. நன்றி.

      • Saravanan Thirumoolar Post authorReply

        வலைதளத்தில் அதற்கான வசதிகள் தற்போது இல்லை. டவுண்லோடு செய்யும் வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்கிறோம். தற்போது தங்களுக்கு தேவைப்பட்டால் தொடர்பு க்கொள்ளவும் அனுப்பி வைக்கிறோம் நன்றி.

  10. கருப்புசாமி Reply

    தங்கள் சேவை ஈடு இணையற்றது, நன்றி ஐயா. ஓம் நம சிவாய

  11. R Krishna Murthi Reply

    மிக உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ளீர்கள்.எங்களது வாழ்த்துக்களும் இறையருளும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும். நான் 4 மந்திரம் வரை பதிவிறக்கம் செய்துள்ளேன். மற்ற மந்திரங்கள் எப்போது கிடைக்கும்? முழு புத்தகமாக கிடைக்குமா? விலை என்ன? ஆன் லைனில் வாங்க வசதி உள்ளதா?

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் நன்றி திருமந்திரம் தினம் ஒரு பாடலாக ஆராய்ந்து எழுதி வலைதளம் மற்றும் பல குரூப்புகளில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறோம். தற்போது 5 ம் தந்திரம் எழுதிக் கொண்டிருக்கிறோம். திருமந்திரம் அனைத்து பாடல்களும் எழுதி முடிக்க சில வருடங்கள் ஆகும். ஒவ்வொரு தந்திரமாக எழுதி முடித்ததும் பிடிஎப் புத்தகமாக மாற்றி வலைதளத்தில் பதிவேற்றுவோம். எழுதியவரை புத்தகமாக இன்னும் வெளியிடவில்லை. நவம்பர் 22 இல் 5 ம் தந்திரம் வரை புத்தகமாக வெளியிட திட்டம் வைத்திருக்கிறோம். வெளியிடும் போது அறிவிப்புகள் செய்வோம் அப்போது தாங்கள் வாங்கிக் கொள்ளலாம். நன்றி

  12. குப்புராஜ்.ரா Reply

    எம் அகத்தின் அசுத்தங்களை போக்கி எல்லாமும் சிவமயம்..அன்பால் சிவம் அறிவால் சிவம் செறிவால் சிவம் என கட்டுண்டு, ஆணவம்-கன்மம்-மாயை இந்த மூன்றிலிருந்து விடுபட்டு சிவனடி கிடக்க…

  13. கெளரிசங்கர் Reply

    நமசிவய நாமம் வாழ்க. ஐயா, திருமூலர் அருளிய ஆசனம் பற்றிய விளக்கமும், விரிவான செய் முறைகளை பற்றி அறிய உதவுக.

    • Saravanan Thirumoolar Post authorReply

      தாங்கள் மெயிலுக்கு ஆசனம் கற்றுக் கொடுப்பவரின் முழுமையான தகவல்களை அனுப்பியிருக்கிறோம்

  14. சிவ வசந்த் Reply

    ஐயா திருச்சிற்றம்பலம். எமக்கு ஆதீன மூலம் மற்றும் உரை திருமந்திரம் நூல் வேண்டுகிறோம். உதவிட தங்களை கேட்டுக் கொள்கிறேன் ஐயா. திருச்சிற்றம்பலம்

    • Saravanan Thirumoolar Post authorReply

      ஆதினத்தில் புக்கத விற்பனை நிலையம் உள்ளது. தங்களுக்கு தேவையான புத்தகத்திற்கு தாங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தினால் புத்தகம் கொரியர் செய்து விடுவார்கள்.

  15. கீர்த்தனா Reply

    நான் இலவச வகுப்பில் சேர விரும்புகிறேன்…

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் கீழ்கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு ஜூம் ஐடி பாஸ்வேடு அனுப்பி வைக்கப்படும் நன்றி

      த. சரவணன்
      9677074984

  16. S .Gunasekaran Reply

    ஐயா வணக்கம்!
    தங்களின் மேலான இந்த பெரும் பணிக்கு இந்த சிற்றடியன் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்.எனக்கு ஓர் ஐயம் உண்டாயிற்று மூன்றாம் தந்திரம் அட்டாங்கயோகம் பிராணாயாமத்தில் ஐயம்.தெளிவுபடுத்தவும்,நன்றி!!!

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் தங்களுக்கு மூன்றாம் தந்திரம் அட்டாங்கயோகம் பிராணாயாமத்தில் என்ன ஐயம் என்று கேட்டால் தெளிவு படுத்துகிறோம்.

  17. Dr.Guruswamy Rajabathar Reply

    sir, The Thirumoolar first mandiram text is simple , understandable and useful and very
    devotional . Thank you very much. Iam looking forward such services.
    Om Namasivaya .

  18. Arvind Reply

    ஓம் நம சிவாயயே.. ஐயா வணக்கம். தங்கல் தொண்டுக்கு என் வாழ்துக்கள்

  19. Vigneshwaran P Reply

    திரு சரவணன் ஐயாவிற்கு ஒரு வேண்டுகோள் அமேசான் கிண்டல் தளத்தில் திருமந்திரம் 9 தந்திரங்களையும் முழுவதுமாக பதிவிட்டு உள்ளீர்கள்… 7 8 9 தந்திரங்களை விரைந்து உங்கள் இணையதளத்திலும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்… 6 தந்திரங்களையும் படித்து விட்டு எஞ்சிய உங்கள் பதிவிறக்கி காத்திருக்கிறேன்… நன்றி!!!

    • Saravanan Thirumoolar Post authorReply

      வணக்கம் அமேசான் கிண்டலில் 3 தந்திரங்கள் மட்டுமே பதிவேற்றியிருக்கிறோம். 4 5 6 தந்திரங்கள் பதிவேற்றவில்லை. வலைதளத்தில் மட்டுமே 6 தந்ததிரங்கள் வரை உள்ளது. 7 ஆம் தந்திரம் இப்போது தான் எழுத்திக் கொண்டிருக்கிறோம். எழுத எழுத வலைதளத்தில் பதிவேற்றி வருகிறோம். நன்றி

  20. vinodhkumar Reply

    என்றும் நன்றியுடன்
    வினோத் குமார்

  21. MUTHU KUMAR B Reply

    ஐயா எனக்கு திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 1 முதல் 1450 வரையிலான பாடல்களை பதிவிறக்கம் செய்யவும்

  22. சிவ.வெங்கட்ராமன் Reply

    வணக்கம் ஐயா
    தங்கள் திருப்பாதம் இருக்கும் திசை நோக்கி வணங்குகின்றேன்.

  23. Devarajan S Reply

    வணக்கம் ஐயா,
    திரு மூலர் அருளிய ஆசனம்
    கற்றுக் கொடுப்பவர்கள் பற்றி விபரம் அனுப்ப வேண்டும் ஐயா
    தேவராஜன் பெங்களூர்,
    மெயில் ஐடி [email protected]
    Phone 9448232763

    • Saravanan Thirumoolar Post authorReply

      திரு TA கிருஷ்ணன் ஐயா அவர்கள் 84 வயது. சென்னையில் வசிக்கிறார். தொடர்பு எண் +91 9444837114 இப்போதும் ஆசனங்கள் சொல்லிக் கொடுக்க சொல்லி கேட்போருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

  24. குமார் Reply

    ஐயா 7-9 மந்திரங்களின் விளக்கவுரை எங்கு பதிவிறக்கம் கிடைக்கும்

    • Saravanan Thirumoolar Post authorReply

      இன்னும் எழுதி முடிக்கவில்லை. எழுதி முடித்த‍தும் வலைதளத்தில் பதிவேற்றுவோம்.நன்றி

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.