அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #72

7-12-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

ஆன்மீகத்தில் செல்லும் போது எதில் ஒழுக்கம் வேண்டும்?

ஆன்மீக பாதையில் ஒழுக்கமே அச்சாணி என்பதை மறந்து விட்டீர்கள். ஒழுக்கம் என்பது மன அளவில் வாக்கு அளவில் செயல் அளவில் சிந்தனையில் என்பதெல்லாம் உண்டு என்பதனால் அதிக அளவில் அசையாது அதிக அளவில் பேசாது அதிக அளவில் தகாதோர் உறவு இல்லாமல் இயன்ற அளவில் தனிமை காண மனசுத்தி தானாக ஆகும். மற்ற சுத்திகள் தொடர்ந்து வரும் இருப்பினும் இதற்கு மேலான அர்த்தம் உண்டு. ஒழுக்கம் என்பதற்கு மறு அர்த்தம் என்னவென்றால் ஒழுகி வருவது என்பதும் அர்த்தமாகின்றது. இதனை ஆங்கிலமதில் கூறினால் UNINTERRUPTED FLOW என்றும் கூறுவர். மனமதில் இடைவிடாது இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருளாகும். இது முடியுமா என்று கேட்டால் இதற்கு உதவியாக மந்திரங்கள் சதா மனமதில் உச்சாடனம் (ஜெபிக்க) செய்ய இறை சிந்தனை எக்காலமும் நம்மை விட்டு நீங்காது. அவ்விதம் மனமதில் இறைவனை நீக்கி விட்டால் மனசுத்தம் இல்லை என்பதே பொருளாகின்றது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.