அஸ்வினி நட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #49

8-9-2009 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

நீலன் (சனிஸ்வர பகவான்) அவன் கொடியவன் என பலரும் கூற நீலன் கொடிய காரியங்களை மட்டும் செய்கின்றவன் அவனை நேரக நின்று வணங்கக் கூடாது சாய்ந்து வணங்க வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றனர் இதன் நிலை என்ன விளக்க வேண்டும்?

நீலன் (சனிஸ்வர பகவான்) தீயவன் அல்ல கெட்டவன் அல்ல கிரகங்களில் அவன் ஞானகாரகன் என பட்டம் பெற்றவனும் ஈஸ்வரன் என கூட்டு பெயரும் கிரகங்களில் அவனுக்கு மட்டுமே. நீங்கள் செய்த பூர்வ ஜென்மதீய கர்மங்களின் பாக்கியை நீக்கவே இவன் ஜாதகத்தில் வருகை தருகின்றான். இது சிந்தித்தோமானால் நலம் தருபவர் என்று புரியும் தீயதல்ல என்று அறிதல் வேண்டும். மேலும் இதனை விளக்கிட வீணாக அவன் பெயரை பலர் அழைப்பதும் கண்டோம் மற்றவர்களை திட்டும் போது அவன் பெயரில் ஈஸ்வரன் நீக்கி விட்டு முன்பாகம் மட்டும் கூறுகின்றனர் இது பெரும் தவறாகின்றது. ஏனெனில் அவன் நாமத்தை கூறியவுடன் அவன் பார்வை உங்கள் மீது திரும்புகின்றது. கருணை வடிவமான அவன் மேலும் சில கடினங்களை கொடுத்து கர்மத்தை தீர்க்கின்றான். இவ்விதமிருக்க தேவையற்ற காலங்களில் மற்றவர்களை திட்டுவதற்கும் ஈஸ்வரனின் நாமத்தை கூறாதீர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.