திருமூலர் ஆரத்தி

ஜய ஜய திருமூலா சுவாமி ஜய ஜய திருமூலா
மக்களைக் காப்பவன் நீயே மன பலம் தருபவன் நீயே
மலர்ந்த முகத்தவனே ஓம் ஜய ஜய திருமூலா

சிவனின் அருள் பெற்றவனே சிவனை சிந்தையில் கொண்டவனே
எமக்கு சிந்தனை தந்து சிவ போதனையும் செய்து
சிக்கலை தீர்த்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நந்தீசன் சீடரே நீர் எமக்கு வளங்களை தந்திடுவாய்
விழிக்கு வழியாய் நின்று வழிக்குத் துணையாய் வந்து
வாழ வழி சொல்வாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஆசைக்கு அணையிட்டு எங்கள் ஆற்றலை வளர்த்திடுவாய்
அழியாப் புகழை சேர்த்து அருகிலிருந்து காத்து
அருள் மழை பொழிந்திடுவாய் ஓம் ஜய ஜய திருமூலா

நிலைபெற்ற நிலைபெறவே நினை தினந்தோறும் வணங்கிடுவோம்
நில்லாமல் உனைப்பாட கலையுணர்வும் மேலோங்கிட
நீயே துணை புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா

பக்தியுடன் உனைப்பாடும் பக்தன் குறைகளைத் தீர்த்திடுவாய்
பக்தி மார்க்கமும் சொல்வாய் பாவ மன்னிப்பும் அளிப்பாய்
பாரில் மாந்தரைக் காப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

பொறுமையின் பொன்மனமே திருமூலா பொய் விதி மாற்றிடுவாய்
பராசக்தி அருள் பெற்றவனே பரிவுடன் எங்களைக் காப்பாய்
காத்து ரட்சிப்பாய் ஓம் ஜய ஜய திருமூலா

ஒன்றே குலமென்றும் உலகில் ஒருவனே தேவன் என்றும்
செப்பிய மாமணியே எங்கள் சத்குருவானவன் நீயே
ஞான வடிவுடயாய் ஓம் ஜய ஜய திருமூலா

அகத்தியன் நண்பனும் நீயே எங்கள் பக்தியை ஏற்றிடுவாய்
குறைகளை எல்லாம் களைவாய் நிறைகளை எல்லாம் ஏற்பாய்
வாழ்த்தி அருள் புரிவாய் ஓம் ஜய ஜய திருமூலா.

2 thoughts on “திருமூலர் ஆரத்தி

  1. கிருஷ்ணராஜ் Reply

    ஐயா வணக்கம்.மகான் திருமூலர் ஐயா அவர்களை வழிபாடு செய்ய விரும்புகிறேன் ஆகையால் ஐயா அவர்களின் தகவல் பற்றி அறிய தங்கது குழுவில் இனைத்து கொள்ள வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்.மேலும் தாங்கள் இனைத்து கொள்வதால் தங்கள் குழுவிற்கு எவ்வித இடைஞ்சலாக இருக்கமாட்டேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

    • Saravanan Thirumoolar Post authorReply

      ஐயா வணக்கம் தாங்கள் திருமந்திர வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அடுத்த திருமூலர் பூஜை மே மாதம் திருமூலர் ஜெயந்தி பூஜை நடைபெறும். கீழ்கண்ட எமது வாட்சாப் குருப்பில் இணைந்து கொள்ளுங்கள். குரூப்பில் பூஜை செய்யப்படும் நாள் நேரம் பதிவிடுவோம் அதனைப்பார்த்து தாங்கள் கலந்து கொள்ளலாம். https://chat.whatsapp.com/AC7zgknNpvwKzScvyHItOk

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.