பாடல் #390

பாடல் #390: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும்
பாங்குஆர் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமல மலர்மிசை மேலயன்
ஆங்குஉயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே.

விளக்கம்:

ஓங்கிய பாற்கடலின் மேல் இருக்கும் திருமாலும், அழகிய கயிலை மலையின் மேல் இருக்கும் பரம்பொருளான சிவபெருமானும், மலர்ந்து விரிந்து இருக்கின்ற தாமரை மலரின் மேல் இருக்கும் பிரம்மனும், ஒவ்வொரு உயிருக்குள்ளும் ஆன்மாவை வைக்கின்ற மூலப் பொருளான சதாசிவமூர்த்தியை உணர்ந்து இருக்கின்றார்கள்.

உட்கருத்து:

பிரம்மன் படைத்தலும், திருமால் காத்தலும், சிவன் அழித்தலும் செய்யும் உயிர்கள் அனைத்திலும் ஆன்மாவாக இருப்பது சதாசிவமூர்த்தியே என்பதை மூவரும் உணர்ந்திருக்கின்றார்கள்.

Related image

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.